2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தமிழக சட்ட சபை தீர்மானத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

Super User   / 2011 ஜூன் 12 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தமிழக சட்ட சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

சிறுபான்மை கட்சிகளுடன் இலங்கை அரசு அதிகார பரவலாக்கம் தொடர்பான பேச்சு நடத்திக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதை குழப்பும் வகையிலேயே மேற்படி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகார பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை குழப்பும் வகையிலும் இந்த கண்டன தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக சட்ட சபையில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களும் கண்டிப்பதாக எச்.எம்.எம்.ஹரீஸ் கூறினார்.

இந்திய வர்த்தக நிறுவனங்கள் பல இலங்கையில் முதலிட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசு மாத்திரமன்றி, இந்தியா அரசும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே கடந்த கால பகைமைகளை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றமை குறிப்பிட்டத்தக்கது.


  Comments - 0

 • ajan Sunday, 12 June 2011 08:01 PM

  ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதுச்சாம் அப்படி இருக்கிறது .
  இப்போது மட்டும் எங்கு இருக்கிறது மக்களுக்கு தீர்வு, பொருளாதார உதவிகள்?
  ஏன் ஐயா உங்கட நாட்காலிக்காக அழுகுறீங்க?

  Reply : 0       0

  rina Sunday, 12 June 2011 08:20 PM

  வட,கிழக்கில் வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பதாக கூறுவது மிகத் தவறான ஒரு கருத்தாகவே நாங்கள் கருதுகிறோம். இவர் எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்? வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களிடம் இது சம்பந்தமாக கருத்து கணிப்புகள் எதுவும் மேற்கொள்ள டவில்லை. இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கருத்து தெரிவிக்க வேண்டுமென கட்சியின் ஆதரவாளன் என்ற அடிப்படையில் எதிர்பார்க்கின்றேன்.

  Reply : 0       0

  mohamed jaleel Sunday, 12 June 2011 08:31 PM

  இலங்கைக்கு பொருளாதார தடை விதித்தால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைத்து விடுமா? வைக்கல் குன்றில் நாய்படுத்துட்டு அது உண்பதும் இல்லையாம், மாட்டை தின்ன விடுவதும் இல்லையாம். அதே மாதிரித்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

  Reply : 0       0

  sarath Sunday, 12 June 2011 08:46 PM

  முஹம்மத் அவர்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்படி என்றல், முஸ்லிம் காங்கரஸ் எப்படி, மரம் விட்டு மரம் தாவும் குரங்கா? பதவிக்காக எந்த அரசாங்கம் வந்தாலும் மாறி மாறி ஒட்டிக்கொள்கிற கட்சியல்ல த. வி. கூ.

  Reply : 0       0

  mafas Sunday, 12 June 2011 09:10 PM

  இருக்கிறதை கொண்டு வாழ்கையை வாழாமல் அளவுக்கு அதிகமாக ஆசப்பட்டா இருகிறதும் இல்லாமல் போய் விடும் கவனம் நண்பர்களே.......

  Reply : 0       0

  raheem Sunday, 12 June 2011 09:18 PM

  இது ஒன்னும் தவறான கருத்தில்லையே..இலங்கை பிரஜை ஒவ்வொருவரினதும் கடமை இது. மற்றது ஜெயலலிதாவின் கண்டனம் சின்ன புள்ள தனமா இல்ல...

  Reply : 0       0

  P.T.Kabeer Sunday, 12 June 2011 09:32 PM

  வைக்கல் குன்றில் நாய் படுத்துட்டு அது உண்பதும் இல்லையாம் மாட்டை தின்ன விடுவதும் இல்லையாம். அதே மாதிரித்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் தான். அவர் கல்முனை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தியையும் ..............

  Reply : 0       0

  ameer Sunday, 12 June 2011 10:23 PM

  கட்சி மாறும் பொழுது வாங்கிய வண்டிக்கு காட்டும் விசுவாசம். வாழ்க பிழைப்பு சுயநலவாத அரசியல்.

  Reply : 0       0

  Jeewan Sunday, 12 June 2011 10:58 PM

  இலங்கையில் முஸ்லிம்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லவும்கூடும். பார்த்துப்பா

  Reply : 0       0

  Fahim Monday, 13 June 2011 12:42 AM

  எமது நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கோ எமது நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப் பரிந்துரைப்பதற்கோ வெளிநாட்டாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. முன்னர் கருணாதிதி குழுவினர் நடத்திய சுயநல அரசியலை ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் இப்போது நடத்துகின்றனர். அவ்வளவுதான்.

  Reply : 0       0

  IBNU ABOO Monday, 13 June 2011 01:23 AM

  ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் தமிழக மக்களின் நாடியோட்டத்தை நன்றாகத்தான் புரிந்து தலையில் மிளகாய் அரைத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு தன் விசுவாசத்தை காட்ட இப்படி அவசப்பட தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டணி எப்படி உறுதியாகவும் ,தெளிவாகவும் இருக்கிறது ஏன் தெரியுமா? இப்போ இந்த சீட்டாட்டத்தில் இந்தியா தமிழர் சார்பாக துரும்பு சீட்டை கையில வைத்திருக்கு. இதுவும் எதிர்கால இந்திய காங்கிரஸ் ஆட்சிக்கு வழிசமைக்கும் ஒரு சித்து வெளையாட்டு.

  Reply : 0       0

  ameer Monday, 13 June 2011 01:43 AM

  harees unkal visuvaasattitku alavu illaya?

  Reply : 0       0

  இலங்கயான்... Monday, 13 June 2011 01:50 AM

  ஆஹா பொங்கிட்டாங்கையா பொங்கிட்டாங்க.... எந்த ஒரு இலங்கை குடிமகனும் ஜெயலலிதாவின் சட்ட மன்றமென்ன ஒபாமாவின் பாராளுமன்றம் கூட இலங்கைக்கு எதிரா தட விதிச்சா கண்டிக்கத்தான் செய்வான். செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் அந்நாட்டின் குடி மக்கள்.
  இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் மாகானங்களில் ஆயுதம் ஏந்தாத அங்குள்ள சிறுபான்மையினரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொடா சட்டத்தை அமுல் படுத்தி அதன் மூலம் அங்குள்ள சிறுபான்மையினரை கொன்று குவித்த ஜெய லலிதாவும்இ குஜராத் நரந்திர மோடியையும் காட்டிலுமா எமது நாட்டு அரசாங்கம் இந்நாட்டின் சிறு பான்மையினருக்கு அநீதி இழைத்திருக்கிறது?
  நகரசுத்தி அரச தொழிலாளிகள் சமபலத்தை உயர்த்தி தர வேண்டும் என்று போராடுகிறார்களே ஜெயலலிதா அதற்கு அவரது சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றி இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் மலம் அல்லும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தலாமே? அதை விடுத்து தனது மாநில மக்களையே காப்பற்ற முடியாத ஜெய லலிதா இலங்கையில் பொருளாதார தடை விதித்திருப்பது வேடிக்கையா இல்ல?

  Reply : 0       0

  sabras Monday, 13 June 2011 03:10 AM

  ஹாரிஸ் அவர்களே ஏன் உங்களுக்கு திடீர் அக்கறை ?
  உள்ளூர் பிரச்சனைகளை முதலில் தீருங்கள்.

  Reply : 0       0

  sifan Monday, 13 June 2011 04:16 AM

  ஹரீஸ் காக்காவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் விவகார பொறுப்பாளர் பதவி கொடுத்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

  Reply : 0       0

  Pasha Monday, 13 June 2011 03:05 PM

  ஹரிஸ், நீங்கள் முதலில் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றுங்கள் எங்கே உங்கள் தனி தரப்பு கோரிக்கை. எங்கே உங்கள் தனி மாகான கோரிக்கை?

  Reply : 0       0

  Saleem Ramees Monday, 13 June 2011 04:25 PM

  அரசாங்கத்துடன் ஒட்டியிருப்பதால் இப்போ இப்படி பேசிறாங்க! திடிரென பல்டி அடிச்சா வேறு கதை சொல்லுவாங்க!!! இதெல்லாம் இப்போ சமூகத்தில் எடுபடாதையா!!!! உங்கட கதிரை கவனம்.

  Reply : 0       0

  Mohd rizvi -Qatar Monday, 13 June 2011 05:08 PM

  அன்பர்களே ஹரீஸ் M P கூறிய கருத்தானது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கருத்து அல்ல. அது அவரது சொந்த கருத்து என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இப்போது உள்ள அரசாங்கத்தை பொறுத்தளவில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் தீர்வு தேவை சுதந்திரம் தேவை. நாளுக்கு நாள் பொருளாதார சுமையை மக்களின் தலையில் சுமத்துகிறது இந்த அரசாங்கம். கருத்து சுதந்திரம் இல்லை. படித்தவர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் சற்று சிந்தியுங்கள் ஹரீஸ் அவர்களே.

  Reply : 0       0

  rasmi Monday, 13 June 2011 08:25 PM

  haris enna

  Reply : 0       0

  sanjith Monday, 13 June 2011 10:15 PM

  நீங்கள் அரசாங்கத்தின் பங்காளி என்றவகையில் உங்களின் கூற்று சரியானதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால்,இன்றுவரை எத்தனை சுற்றுப் பேச்சுக்கள் நடத்திவிட்டார்கள்? இனியும் நடத்துவார்கள்.ஆனால்,தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பேரினவாதிகள் விட்டுத்தர மாட்டார்கள்.முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமான கட்சி.அது எப்போதும் மக்களின் நலனையே கருத்தில் கொள்ள வேண்டும்.

  Reply : 0       0

  asker Tuesday, 14 June 2011 12:23 AM

  .எப்படியோ பொழுது விடிந்தது புலி ஓய்தது, நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு பாப்போம்.

  Reply : 0       0

  akkarai Tuesday, 14 June 2011 12:41 AM

  நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்தான். எம்நாட்டுக்கு எவன் தடை விதித்தாலும் அது நமக்கு விதித்தது போல் ஆகும்.

  Reply : 0       0

  infas Tuesday, 14 June 2011 12:46 AM

  முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பொது நல நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி இன்று சுயநல கருத்துக்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன.முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் ஒரு அமைச்சு பதவி கிடைக்காமலா போகும்?

  Reply : 0       0

  Jeewan Tuesday, 14 June 2011 02:27 AM

  தமிழக சட்டசபைத் தீர்மானம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அறிவித்திருக்கிறார். பிறகு எதற்காக, எந்த அடிப்படையில் ஹரீஸ் எம்.பி. மேற்படி அறிவிப்பை விடுத்தார்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .