Super User / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இனவாத மனப்பாங்கிலிருந்து தாராளவாத தன்மையுடையதாக மாற்றியமைக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை தான் மதிப்பதாக மீன்பிடித்துறை அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரட்ன இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியில் கூடுதலான தாராளவாத கொள்கைகளை சந்திரிகா குமாரதுங்க உட்புகுத்தச் செய்வதில் அவரின் கணவரான காலஞ்சென்ற விஜய குமாரதுங்க செல்வாக்கு செலுத்தியதாகவும் வடக்கு கிழக்கு விவகாரம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சேனாரட்ன, கூறினார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவினை ஏற்படுத்தும் மொழிக் கொள்கையை சந்திரிகா திருத்தியதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.
'நான் சந்திரிகாவை விரும்பவில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இனவாத மனப்பாங்குடையது என்ற நிலையிலிருந்து தாராளவாத மனப்பாங்குடையதாக மறுசீரமைத்தார் என்ற காரணத்திற்காக அவரை நான் மதிக்கிறேன்' என அமைச்சர் சேனாரட்ன கூறினார்.
'சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான எனது கொள்கைகளில் நான் உறுதியாகவுள்ளேன். இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கௌரவத்தை நிலைநிறுத்தாமல், இலங்கையின் கௌரவத்தை நிலைநிறுத்த முடியாது' என அவர் கூறினார்.
manithan Saturday, 22 October 2011 12:30 PM
தமிழர்களையும் முஸ்லிம்களையும் வந்தேறு குடிகளாகப் பார்ப்போர் சிங்களவர்களும் அவ்வாறு வந்தேறு குடிகளே என்பதை அறிய வேண்டும். அவர்களின் வாதப்படி, நாட்டை வேடுவர்களுக்குக் கொடுத்து விட வேண்டி வரும்.
Reply : 0 0
xlntgson Wednesday, 26 October 2011 06:46 PM
சந்திரிகாவை அடுத்த தேர்தலில் பொது அபேட்சகர் ஆக்குவீர்களோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .