2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

Editorial   / 2026 ஏப்ரல் 16 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. "உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம் வாரீர்!" மலையகப் பெருந்தோட்ட மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வரும் அடிப்படைச் சுயவுரிமைப் பிரச்சினைகளில் முதன்மையானது நில உரிமை மற்றும் வீட்டுரிமை ஆகும். இது குறித்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் தோழர் S.T. கணேஷலிங்கம் (சிப்ஸ் நிறுவனம்) மற்றும் தேசிய நாடகக் கலைஞர் தோழர் தியாராஜா சிவநேசன் (சங்கு கலைக்கழகம்) ஆகிய இரு பெரும் ஆளுமைகளுடன் எமது குழுவினர் இணைந்து மக்களுக்கான "உரிமை யாத்திரை"யை மேற்கொள்கின்றனர். மக்களின் உரிமைக் குரலுக்கு வலுசேர்க்க மஸ்கெலியா, சாமிமலை, காட்மோர் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம். வாருங்கள், எம்மோடு ஒன்று சேருங்கள்! இரண்டாம் நாள் விழிப்புணர்வு நிகழ்வு "மலையக மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை!" இவ்வுன்னதத் தொனிப்பொருளில், இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுர விநியோகம் எமது குழுவினரால் பின்வரும் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது: லிந்துலை நாகசேனை திஸ்பனை மெரேயா ஹோல்புரூக் மன்ராசி அக்கரபத்தனை டயகம மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் இந்தப் பயணத்தில் கைகோர்ப்போம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .