Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 17 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் இணையத்தளங்களை தடை செய்வதற்கான அதிகாரம் ஊடகத்துறை அமைச்சுக்கு உள்ளது. இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை.
அந்தவகையிலேயே நாட்டில் இயங்கிவந்த 10 இணையத்தளங்களை தடை செய்துள்ளோம்' என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதன்போது, இணையத்தளங்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளமை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'ஆபாசங்கள், தனிநபர் விமர்சனம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மேற்படி 10 இணையத்தளங்களுக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இருப்பினும் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கோ அல்லது அவை தொடர்பில் விளக்கம் கேட்பதற்கோ மேற்படி இணையத்தளங்களை நடத்துபவர்களை தொடர்புகொள்ள முடியாதுள்ளது. அவற்றை நடத்துபவர்கள் யார்?, எங்கிருந்து அவ்விணையத்தளங்களை நடத்தகிறார்கள்? என்பது பற்றி எவருக்கும் தெரியாது.
இவ்வாறான பிரச்சினையின் காரணமாகவே மேற்படி இணையத்தளங்களைத் தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இது இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்ட பிரச்சினையல்ல. விக்கிலீக்ஸ் செய்தி வெளியீடு காரணமாக அமெரிக்காவில் 25 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தாய்லாந்தில் 48 ஆயிரம் இணையத்தளங்களும் சீனாவில் 15ஆயிரம் இணையத்தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் செயற்படும் இணையத்தளங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும் அவற்றின் நடத்துநர்கள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையிலேயே, இலங்கையில் செயற்படும் இணையத்தளங்கள் அனைத்தையும் பதியுமாறு அறிவித்துள்ளோம்.
இதன்மூலம், இனிவரும் காலங்களில் இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் வரும் பட்சத்தில் அவை தொடர்பில் அறிவிக்க முடியும். விளக்கம் கோர முடியும்' என்றார். (M.M)
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025