2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

சொத்துக்களுக்கான வருமான மூலத்தை வெளிப்படுத்த தவறியதாக முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக லஞ்ச விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அனுருத்த ரத்வத்தை கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தமைக்கான மரண அத்தாட்சி பத்திரத்தை அவரின் சட்டத்தரணி வசந்த பாத்தகொட நீதிமன்றில் சமர்ப் பித்தார்.

அதையடுத்து நீதிபதி சுனில் ராஜபக்ஷ இவ்வழக்கை தள்ளுபடி செய்ததுடன், இவ்வழக்கு தொடர்பாக ஒப்படைக்கப்பட்ட பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு கோரும் மனுவொன்றை தாக்கல் செய்யுமாறும் சட்டத்தரணியிடம் கூறினார்.

தனது சொத்துக்களையும் வருமானங்களையும் எவ்வாறு பெற்றுகொண்டார் என்பதை லஞ்ச விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளிப்படுத்த தவறியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

அனுருத்த ரத்வத்தை சார்பாக ரியன்ஸி அரசகுலரட்னவும் வசந்த பாத்தகொடவும் ஆஜராகினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .