2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

அரசு-ப.ஆ.ச.ச.வின் கூட்டறிக்கையை சங்கங்கள் ஏற்றால் பல்கலை வேலை நிறுத்தத்துக்கு முடிவு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

அரசாங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டறிக்கையின் வரைவு சகல பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் சங்கங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அவற்றின் அபிப்பிராயங்கள் கேட்கப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் நாளைய தினம் பல்கலைக்கழக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திர்மானம் எடுக்கப்படலாம் என மேற்படி சம்மேனம் கூறியது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் சங்கங்கள் தனித்தனியாக இந்த கூட்டறிக்கையின் உள்ளடக்கத்தை ஆராயவுள்ளன.

அவை இதை ஏற்றுக்கொண்டால் பல்கலைக்கழக வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்று மேற்படி சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .