2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெலிக்கடையில் அதிரடிப்படையினர் மீது கல்வீச்சு; ஆயுத களஞ்சியசாலை உடைப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையுடன், பொலிஸ் அதிரடிப்படையினர் மீது கைதிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள வீதியிலும் கற்கள் வந்து விழுந்தவண்ணம் உள்ளன.

இதேவேளை, சிறைச்சாலையிலுள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்துள்ள சிறைக்கைதிகள், அதிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிகளை ஏந்தியவாறு அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்படுவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டு அதனூடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்றுவீதிகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .