2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வெலிக்கடை சிறைச்சாலை நடவடிக்கைகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வெலிக்கடை சிறைச்சாலை, மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கு விரைந்த விசேட இராணுவ கொமாண்டோக்கள், தங்களது அதிரடி நடவடிக்கையின் மூலம் இன்று அதிகாலை நிலைமையை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அத்துடன் சிறைச்சாலையின் நடவடிக்கைகளையும் சில மணிநேரங்கள் வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து மீண்டும் சிறைச்சாலை திணைக்களத்திடம் சிறைச்சாலை நடவடிக்கைகளை இராணுவம் கையளித்துவிட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

தற்போது, சிறைச்சாலை முழுவதும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டு வருவதாகவும் இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்புக்காக சிறைச்சாலைக்கு வெளியே அணிவகுத்திருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .