2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வெலிக்கடை கலவரம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

இதற்கமைய, சிறைச்சாலை உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

மேற்படி சிறைச்சாலையில் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் என இவர்களை வேறு வேறாக தடுத்து வைக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் மனித உரிமை ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .