2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அழைப்பு விபரம் கிடைக்கவில்லை: பொலிஸார்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் நடத்துவதற்கு வருகை தந்ததாக கூறப்படும் சந்தேகநபர் போலியான வாகன தகடு இலக்கத்தையே பயன்படுத்தியுள்ளார்.

அத்துடன் இதேவேளை அவரது தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புகள் மற்றும் வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பிலான விபரங்கள் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் தொடர்பிலான வழக்கு கல்கிசை பிரதான நீதவான் ரொசான் நிரோச பெர்னண்டோ முன்னிலையில் இன்று நடைபெற்றது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது கல்கிஸை பகுதியில் வைத்து ஒக்டோபர் 08ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான அறிக்கையே நீதிமன்றத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் நடத்தியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்துவதற்கு சந்தேகநபர் வருகைதந்ததாக கூறப்படும் வகையை சேர்ந்த 450 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக குறித்த சந்தேகநபர் போலியான வாகன தகடு இலக்கத்தை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இதேவேளை அவரது தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புகள் மற்றும் வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பிலான விபரங்கள் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .