2021 ஜனவரி 27, புதன்கிழமை

கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து சேகு இஸ்ஸதீன் நீக்கம்

Super User   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, எம்.சுக்ரி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளராக செயற்பட்ட சேகு இஸ்ஸதீன் 1992ஆம் ஆண்டு கால பகுதியில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின்போது, கொள்கை பரப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல அதியுயர் பீட கூட்டங்களுக்கு எந்தவித காரணங்களுமின்றி தொடர்ந்து கலந்துகொள்ளாமையினால் குறித்த பதவியிலிந்து சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான யூ.எல்.எம்.என்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் மட்டு. மாவட்ட அமைப்பாளருமான இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளருமாவார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவராக கட்சியின் ஸ்தாபக பொது செயலாளரான சட்டத்தரணி அட்டாளைச்சேனை கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு பதவிகளுக்கான அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்குறித்த இரண்டு பதவிகள் தவிர்ந்த தேசிய தலைவர், பொது செயலாளர், தவிசாளர் மற்றும் பொருளாலர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு ஏற்கனவே உள்ளவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • Mulla Tuesday, 01 January 2013 06:58 AM

  முதல் நல்ல தலைவர் ஒன்றை தெரிவு செய்யட்டும்..! மு.கா

  Reply : 0       0

  AJ Tuesday, 01 January 2013 12:36 PM

  முதலில் கட்சிக்கு என்று ஒரு கொள்கையை வைங்க ஐயா பிறகு அதுக்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யலாம்.

  Reply : 0       0

  jesmin Tuesday, 01 January 2013 03:22 PM

  தலைவர் மாத்திரமல்ல தவிசாளரும் மாற்றம் செய்யப்படவேண்டும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .