2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மாகாண அதிகாரங்களை தடுக்க கூட்டுப்பிரகடனம் : பொதுபல சேனா கோரிக்கை

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.எஸ்.ஜயசிங்க

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உட்பட மேலதிக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு கையளிக்காமல் இருக்கும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மகாசங்கத்தின் கூட்டுப்பிரகடனம் ஒன்றை செய்வதற்கு ஒத்துழைத்துமாறு பொதுபல சேனா கோரியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் வண. குலகொடத்த ஞானசர தேரரே மல்வத்த மாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ வித்தார்த்த சுமங்கள தேரரிடம் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.

மல்வத்த மாநாயக்கரை மல்வத்தை பீடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.

வடக்கின் முதலமைச்சராக வரவிரும்பும் ஒரு குழுத்தலைவரின் அறிக்கை பெரும் கவலைத்தரும் விடயமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டினார்.

முதலமைச்சராக பெயர் குறிக்கப்பட்ட இவர் தான், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கபோவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் இந்த பிரச்சினையை இந்திய அரசாங்கத்திமும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச போவதாகவும் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் பொது அபிபிராயத்தை அரசாங்கம் அலட்சியம் செய்யுமாயின் மகாசங்கம் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி போதைப்பொருள் கடத்தல், மதுபான வியாபாரம்  ஆகியன கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது. அமைச்சர்கள் பலர் மதுபான கடைகளை நடத்துகின்றனர். சில அமைச்சர்கள் 50 க்கும் மேற்பட்ட மதுபான கடைகளுக்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போதைவஸ்து கடத்தும் மாபியா குழுக்களின் முக்கிய தலைவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--