2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கொல்லப்பட்ட தேவியன் புலிகளின் விமானி?

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக விடுதலைப் புலிகளால்  பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய  கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் புலிகளின் 2 விமானங்களும் அழிந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தப்பி சென்றார் தேவியன். ஐரோப்பாவில் இருந்து நெடியவனால் கோபி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தேவியனும் இலங்கைக்கு சென்று இணைந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இலங்கை அரசு கோபியுடன் சேர்ந்து தேவியனைப் பற்றியும் தகவல் தரக்கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று நடந்த மோதலில் கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • thanan Saturday, 12 April 2014 02:00 PM

    இன்னுமா இதை நம்புகிறீர்கள்????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--