2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கழுதைகளுடன் ஐ.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள மூலோபாய அபிவிருத்தி கட்டளை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கெசினோ சூதாட்ட நிலையமொன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

மூலோபாயம் எனும் வார்த்தையை அகற்றிவிட்டு சூதாட்டத்தை சட்டமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கழுதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க எம்.பி.க்களும் ஆதரவாளர்களுக்கும் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கழுதையொன்றின் மீது அமர்ந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--