.jpg)
சரத் என் சில்வாவும் அனுர குமாரவும் இன்று கூலி விவசாயிகளின் கதாபாத்திரங்களை ஏற்று செயல்படுகின்றார்கள் என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறை தலல்ல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை, திவிநெகும திட்டத்தின் 06ஆவது கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் ஒரு வரலாற்று கதையை ஞாபகப்படுத்த வேண்டும். ஒரு நீதியரசருக்கு எதிராக நமது நாட்டின் முதல் குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அது அன்று நீதியரசராக இருந்த சரத் என் சில்வாவிற்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
அந்த குற்றப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திஸாநாயக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்தே கொண்டுவந்தனர்.
முன்னால் நீதியரசராக இருந்த சரத் என் சில்வா மீது சட்டத்திற்கு முரண்பட்ட நீதி வழங்குதல் போன்ற குற்றங்களை சுமத்தி அவருக்கு இது முடியாது, அவர் பதவியிலிருந்த நீக்கப்படவேண்டும் என்ற கூறி அந்த பிரேரணையை கொண்டுவரப்பட்டது.
ஆனால் இன்று, சரத் என் சில்வாவும் அனுர குமாரவும் சேர்ந்து கூலி விவசாயிகளின் கதாபாத்திரங்களை ஏற்று செயல்படுகின்றார்கள். அவர்கள் கடுமையாக உழைத்து வியர்வை சிந்தி சிறியதொரு அறுவடையை தன்னிடம் வைத்துக்கொண்டு அறுவடையின் பெரிய பங்கினை விவசாய உரிமையாளருக்கு பெற்றுக்கொடுப்பதற்காக முயற்சிக்கின்றனர்.
ஆனால் அவ் உரிமையாளர் இருப்பது வேறு இடத்திலேயே என்பதை நாம் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பொதுமக்கள் சேவையில் இருந்து விலகி நின்றால் அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் தவறான வழியில் நடந்து போகின்றார்கள் என்றால் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்.
டலஸ் அழகப்பெரும குற்றம் செய்கின்றார் என்றால் திருடன் என்று எழுதுங்கள் அவற்றை சான்றுகளுடன் சுட்டிக்காட்டுங்கள். இதுதான் ஜனநாயகம் இதுத்தான் ஊடகச்சுதந்திரம்.
ஆனால் எமது நாட்டின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதற்கு யாராவது முயற்சித்தால் எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தை அந்த விடயத்திற்கு கொடுங்கள் என்றார்.
.jpg)