2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

188 வாக்காளர் அட்டைகள் மீட்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

ஊவா வெல்லஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல கிராமசேவகர் பிரிவில் உள்ள லக்கிலேன்ட் தோட்டத்தில் உள்ள சிகையலங்கார நிலையத்திலிருந்து 188 வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியரே இந்த வாக்காளர் அட்டைகளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரியவருகின்றது.

தற்காலக சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர் உடபுஸ்ஸலாவை தபால் நிலையத்தில் சேவையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளரை கைதுசெய்துள்ளதாகவும் அவரை, வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .