Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றப்புலனாய்வு துறையினரால் சனிக்கிழமை(08) கைதுசெய்யப்பட்டதுடன் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டதாகவும் அநுராதபுரத்திலுள்ள ஆசிரியை ஒருவருக்கு சொந்தமானது எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காருக்கு வரி செலுத்துவதற்காக வாடகை அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு ஆசிரியை வழங்கியுள்ளார்.
குறித்த நிறுவனத்திடம் இருந்து அந்த காரை வாடகைக்கு வாங்கிய மற்றுமொரு நபர், குறித்த நிறுவனம் வாடகையாக வசூலிக்கும் பணத்தைவிட அதிக தொகைக்கு சந்தேகநபருக்கு இந்த வாகனத்தை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago