Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2011 ஜனவரி 20 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆணை கோரும் விண்ணப்பத்தின் மீதான விசாரணையை மே 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்மானித்தது.
30 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்த 2ஆவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நீதிபதிகளான எரிக் பஸ்நாயக, உபாலி அபயவர்தன ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் பெப்ரவரி 21ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபகங்களை தாக்கல் செய்யும் படி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் பணித்தது. இதேவேளை, மனுதாரரை மார்ச் 4ஆம் திகதிக்கு முன் மறுப்பு சத்திய கடதாசிகளை தாக்கல் செய்யும் படி பணித்தது. நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் தினங்களில் மனுதாரரான சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டும் என நீதிமன்றம் பணித்தது.
முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவை, 2ஆவது மற்றும் 4ஆவது பிரதிவாதிகளால் தன்னை இரண்டாவது இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாக கண்டதை எதிர்த்தும் 2ஆவது மற்றும் 4ஆவது பிரதிவாதிகளால் நடத்தப்பட்ட 2ஆவது நீதிமன்றின் முழு செயற்பாட்டையும் செல்லுபடியற்றது என ஆக்க கோரியும் 2ஆவது மற்றும் 4ஆவது பிரதிவாதிகளால் தனக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறை தண்டனையையும் செல்லுபடியற்றதாக்க கோரியும் மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago