Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 17 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 4 யானைகள் மாத்திரமே பலியானதாக வன ஜீவராசிகள் துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் 50 யானைகள் பலியானதாக வெளியான செய்திகளை அவர் நிராகரித்தார்.
ஹபரனை, கிரிதலை, கவுதுல்ல, மின்னேரிய ஆகிய பிரதேசங்களிலேயே 4 யானைகள் உயிரிழந்துள்ளன என அவர் கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து வனவிலங்கு சரணாலயங்களும் வெளிநாட்டவர்கள் உட்பட உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளன எனவும் ஆனால் சில சரணாலயங்களுக்கான பாதைகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பாதைகளை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தொகையான ஆடுமாடுகள் கோழிகள் என்பனவும் இறந்துள்ளதாகவும் ஆனால் அவற்றின் சரியான எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யானைகள் மற்றும் ஏனைய வன விலங்குகளின் சரியான எண்ணிக்கையை மதிப்படுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025