2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் இராணுவத்தினர் இன்று சோதனை

Super User   / 2010 மே 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஆஜர்ப்படுத்தப்படவிருப்படால்,  புதுக்கடைப் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பொருள்கள் ஏதாவது மறைத்துவைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலேயே இரானுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, முள்ளிவாய்கால் பகுதியில் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக  ஜெனரல் சரத் பொன்சேகா ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி பேட்டி தொடர்பில் மனுவொன்றை இரகசிய பொலிஸார் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையிலேயே,  ஜெனரல் சரத் பொன்சேகா நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--