2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கிளினிக்கில் மருந்து வாங்குபவர்களுக்கான அறிவிப்பு

R.Maheshwary   / 2020 நவம்பர் 24 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளினிக் புத்தகங்களை பொலிஸ் காவலரண்களில் கையளித்து, தமக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசங்களில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அருகிலள்ள எந்தவொரு கிளினிக் நிலையத்துக்கும் சென்று பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால் நோயாளிகள் தமது கிளினிக் புத்தகங்களை அருகிலிருக்கும் பொலிஸ் காவலரணுக்கு வழங்கி, தமக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வைத்திய குழுக்களை அனுப்பி நடமாடும் கிளினிக்கை நடத்திச் செல்வதாகத் தெரிவித்துள்ள அவர், இதன்மூலமும் தமக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .