2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கே.பி.யுடன் முக்கிய தமிழ் கட்சிகள் சந்திப்பு...

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுடன் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்கு உறுதிப்படுத்தினார்.

எதுசம்பந்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றன என உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல ஊகங்கள் மட்டும் வெளியாகியிருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--