Editorial / 2020 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்- பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக, இந்திய அரசாங்கத்துடன் செய்ய எதிர்பார்த்துள்ள புரிந்தணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவையில் முன்வைத்து, அமைச்சரவையின் அனுமதியை பெறவுள்ளதாக, சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 வாரத்துக்குள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அனுமதியுடன் விரைவில் இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
6 hours ago