2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான செயற்பாடுகள்

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் கழிவுப் பொருள்களை வீசுதல் மற்றும் துப்புதல் ஆகியவற்றுக்கு எதிரான  செயற்பாடுகள் இன்னும் சில நாள்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், நகர்ப்புறங்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பது என்பது தொடர்பான அறிவூட்டல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக கொழும்பு மாநகரசபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமில் தெரிவித்தார்.

மேற்படி அறிவூட்டல்களுக்கு ஏற்ப நகர்ப்புறங்களை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

எனினும், இதற்கு எதிராக செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒமர் காமில் குறிப்பிட்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--