2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மின்னல் தாக்கியதில் இராணுவத்தினர் பலி செய்தியில் உண்மையில்லை - பேச்சாளர்

Super User   / 2010 மே 31 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் இராணுவ வீரர்கள் நான்கு பேர் கொழும்பில் உயிரிழந்ததாக சொல்லப்படும் செய்தியில்  உண்மையில்லை. இவ்வாறு இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்ஹ தமிழ்மிரர் இணையத்தலத்துக்கு தெரிவித்தார்.

கொழும்பு, காலிமுகத்திடலில் போர் வெற்றி விழாக் கொண்டாட்டத்துக்காகான அலங்காரப் பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினரில் நால்வர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்று வெளிநாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்பொழுது இரு இராணுவ வீரர்கள் மாத்திரம் காயமடைந்ததாக தெரிவித்த இராணுவ பேச்சாளர், அவர்கள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதன் பின்ன்ர் வீடு திரும்பியுள்ளனர் என்றும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X