2020 மே 29, வெள்ளிக்கிழமை

97 சதவீதமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Editorial   / 2019 மே 15 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 97 சதவீதமான நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பகல் மல்வத்து பீடாதிபதி அஸ்கிரி மகாநாயக்கரை சந்தித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரே இன்னும் கைதுசெய்யப்படாமல் இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவியவர்களும் தீவிரவாதிகளாக கருதப்பட்டு கைதுசெய்யப்படுவர் என்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண சுதந்திரம், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X