2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கலஹிடியவெவ குளம் உடைப்பெடுத்ததனால் 17 வீடுகள் சேதம்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (எம்.இஸட்.எம்.இர்பான்)
சூரியவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலஹிடியவெவ குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தினால் 17 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக இக்குளம் உடைப்பெடுத்துள்ளது.

இதில் 3 வீடுகள் முற்றாகவும், 14 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதோடு இவ் வீடுகளில் வசித்து வந்த 60 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவு நிவாரணம் சூரியவெவ  பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .