2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திருமலை 11 பிரதேசங்களுக்குமான இணைத்தலைவராக துரைரெட்ணசிங்கம் தெரிவு

Princiya Dixci   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, சுசந்த புஞ்சி நிலமே தலைவராக இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருண சிறிசேன கந்தளாய் - சேருவில பிரதேச குழுவுக்குத்  தலைவராகவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் தம்பலகாமம் - கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுவுக்குத் தலைவராகவும் இம்ரான் மஹ்ரூப் -திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக அபிவிருத்தி குழுவுக்குத் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கே .துரைரட்ணசிங்கம் அனைத்து பிரதேசத்துக்கும் இணைத்தலைவராக செயற்பட்டு வரும் விதத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .