2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியவர்களுக்கு வலைவீச்சு

Gavitha   / 2016 மார்ச் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிப்பொத்தானை-இல 269  - 08ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அப்துல் சௌர்தீன் என்பவருடைய EP JR-9807 என்ற இலக்கத்தையுடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், முச்சக்கரவண்டியின் உரிமையாளர், தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இதனுடைய தொடர்புடைய எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .