2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திருமலையில் 11 பிரதேசங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் 11 பிரதேசங்களிலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

வெருகல் பிரதேசத்தில் 200 குடும்பம் 985 அங்கத்தவரும், குச்சவெளி பிரதேசத்தில் 15 குடும்பம் 65 அங்கத்தவரும், திருகோணமலை பட்டனமும் சூலலும் 540 குடும்பம் 2049 அங்கத்தவரும், சேறுவில பிரதேசத்தில் 53 குடும்பம் 172 அங்கத்தவரும், மொறவௌ பிரதேசத்தில் 64 குடும்பம் 214 அங்கத்தவரும், கிண்ணியா பிரதேசத்தில் 1,106 குடும்பம் 4,563 அங்கத்தவரும், தம்பலகாமம் பிரதேசத்தில் 197 குடும்பம் 777 அங்கத்தவர்களும், முதூர் பிரதேசத்தில் 3104 குடும்பம் 11,954 அங்கத்தவர்களும், பதவிசிறிபுர பிரதேசத்தில் 01 குடும்பம் 05 அங்கத்தவர்களும், கன்தளாய் பிரதேசத்தில் 300 குடும்பம் 1000 அங்கத்தவர்களும், கோமரங்கடவல பிரதேசத்தில் 14 குடும்பம் 39 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் முஹாஜர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் பாதிப்புதொகை அதிகரிக்கலாமென எதிர்பார்கப்படுகின்றது. இடம் பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகளை அவ்வப் பிரதேச செயலகங்கள் வழங்கி வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் மாகாண கல்விச்செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக திருமலை வலயத்திலுள்ள ஐமாலியா, முஸ்லிம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--