2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.08.2010) காலை 8.15 மணி தொடக்கம் 9.20 வரையுள்ள சுபமுகூர்தத்தில் நடைபெற இருக்கிறது.

வெள்ளிக்கிழமை (27.08.2010) காலை 8.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி சனிக்கிழமை (28.08.2010) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். இது காலை 8.00 மணி தொடக்கம் மாலை 500 மணி வரை நடைபெறும்.

ஆலய  எண்ணெய் காப்பு, கும்பாபிஷேகம் என்பனவற்றை முன்னிட்டு திருகோணமலையில் இருந்து பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1983ஆம் வருடம் இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இறுதியாக நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையின் போது இவ் ஆலயம் சேதமாக்கப்பட்டது. 2005ஆம் வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த சாதாரண நிலைமையினைத் தொடர்ந்து பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .