Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
பன்மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் தமிழ் மொழியைப் பேசுவதில் எவரும் வெட்டகப்பட வேண்டியதில்லை. இதனை பேசுவதற்கு தயக்கம் காட்டவும் கூடாது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களம் நடத்திய இலக்கிய விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டு 15 பேருக்கான முதலமைச்சர் விருதுகளை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய முதலமைச்சர், 'தமிழ் மொழியில் பேசுவது எமக்கு கௌரவம். தமிழை அனைவரும் நேசிக்க வேண்டும். தாய் மொழிக்கு நாம் செய்யும் சேவை கௌரவத்தை பெற்றுத்தரும். வேற்று மதத்தவர்கள், இனத்தவர்களின் கலாசாரங்களையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது கலைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
எதிர்வரும் வருடங்களில் இவ்விழாவினை இதனிலும் சிறப்பாக நடத்துவதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். இங்கு 15 கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago