2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியை கொலையுடன் சம்பந்தப்பட்ட இரு சந்தேகநபர்கள் கைது

A.P.Mathan   / 2011 நவம்பர் 26 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் ஆசிரியை கொலை சம்பந்தமாக சமபுர் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

நகுலேஸ்வரன், பாலன் என்ற இருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியையிடம் இருந்து தங்க நகைகளை அபகரிக்கவே தாங்கள் இக் கொலையை புரிந்ததாக பிரதான சந்தேக நபர் நகுலேஸ்வரன் பொலிஸாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் நாளை சனிக்கிழமை மூதூர் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

பிரதான சந்தேக நபர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சந்தோசபுரம் இருந்த வேளையில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக விடுதலைப் புலிகளின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தவர் என்றும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .