2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

2011ஆம் ஆண்டின் பாடசாலை புத்தகங்கள் வழங்கும் தேசிய நிகழ்வு இம்முறை கிழக்கில்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

2011ஆம் ஆண்டுக்கான பாடாலை புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவத்தை டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடத்த கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

திருகோணமலை விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள தேசிய வைபவத்தில் அமைச்சர்களும் கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

2011ஆம் ஆண்டுக்கான இலவச பாடசாலை நூல்களுக்காக அரசாங்கம் 300 கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளதுடன் 364 வகையான நூல்களுக்காக 3 கோடியே 7 இலட்சம் பக்கங்களை அச்சிட்டுள்ளதாக இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜெ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X