2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பழ மரங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

கொழுப்பில் தலைமையகமாகக் கொண்டு நாடு பூராகவும் இயங்கும் 'மெகா பாமா பிறைவேற் லிமிட்டேட்'      எனும் மருந்துகளை வினியோகிக்கும் நிறுவனம் இலங்கையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 15 அரச வைத்திய சாலைகளில் 150 பழமரங்களை நட்டு வைத்ததாக மேற்படி நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் தே.நிசாந் தெரிவித்தார்.

பொதுவாக காடுகள் அழிக்கபட்டு வருகின்றன இதனால் மரங்கள் குறைவடைந்து செல்வதனால் சூழல் மாசடைந்து கொண்டு வருகின்றது அதற்காகவேண்டி எமது அமைப்பு இன்று இலங்கையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 15 வைத்தியசாலைகளில் மா, பலா, போன்ற பல்லாண்டு பயன் தரும் பழ மரங்களை நட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவற்றுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பழ மரங்கள் நடும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (11)  மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலை நிருவாகத்தினர், மற்றும் மெகா பாமா பிறைவேற் லிமிட்டேட் அமைப்பின் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டு வைத்தியசாலையினைச் சூழ பழ மரங்களை நட்டுவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--