2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபினால் கிண்ணியாவில் வைத்து நேற்று (28) மாலை வழங்கப்பட்டது.

இதேவேளை, நகர சபை உறுப்பினர் ஏ.எம்.மஹ்தீ, மூதூர் தொகுதிக்கான பிரசார செயலாளராகவும், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரிஸ், குச்சவெளிக்கான மத்திய குழுத் தலைவராகவும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, கிண்ணியா பிரதேச சபையின் பிரசார செயலாளராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .