A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்திற்காக யாழ். குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்திருந்தனர்.
ஆலயத்துக்கு செல்லும் அடியவர்களின் நன்மை கருதி ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதணிகளை வைப்பதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆலய வீதிகளில் யாழ். மாநகரசபை மேயர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜாவின் நேரடிக் கண்காணிப்பில் மண் பரப்பப்பட்டு அடியவர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு ஏதுவாக பவுஷர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டதுடன், மேலும் சில செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலயத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், ஆலய வீதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆலய வீதிகளில் தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் படையினரும் ஆலய வீதிகள் மற்றும் வீதிப் மறிப்புப் பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாடுவதற்கு யாழ். மாநகரசபை மேயர் தடை அறிவித்தல் விடுத்திருந்தபோதிலும், இதனை மீறி பலர் ஆலய வீதிகளில் நடமாடியதை அவதானிக்க முடிந்தது.
அங்கப் பிரதிஷ்டை செய்யும் பகுதிகளில் இவ்வாறு பாதணிகளுடன் நடமாடுவதால் தொற்றுநோய்கள் பரவும் நிலைமை காணப்படுவதாகவும் இதற்கு மாநகரசபை மேயர் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகிய நல்லூர் கந்தனின் திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pix: Waruna Wanniarachi
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




31 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago