Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஜூலை 19 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று தொடக்கம் பாமன்கடைப் பகுதியில் புதிய போக்குவரத்து விதிகளை போக்குவரத்துப் பொலிஸார் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். இந்த புதிய விதிகளினால் வழமையான கடமைகளில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர். இன்று காலை பாமன்கடைப்பகுதியில் வாகனங்கள் புதிய மாற்றத்திற்கமைய மாற்றியனுப்பப்படுவதை படங்களில் காணலாம்.
பாமன்கடையிலிருந்து ஹைலெவல் வீதிக்கு வரும் வாகனங்கள் ஸ்டெபர்ர்ட் வீதியை பயன்படுத்த முடியாது.
இந்த வாகனங்கள் பாமன்கடையிலிருந்து இடது புறம் திரும்பி ஹெவ்லொக் வீதி மாயா மாவத்தை ஊடாக ஹைலெவல் வீதியை வந்தடைய முடியும். ஹைலெவல் வீதி ஊடாக நுழையும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பாமன்கடையிலிருந்து பழைய ஹெவ்லொக் வீதி ஊடாக மாயா மாவத்தையை வந்தடையமுடியும்.
டபிள்யூ.ஏ.டி.சில்வா மாவத்தையிலிருந்து கொஹுவலைக்குச் செல்லும் வாகனங்கள் பழைய ஹெவ்லொக் வீதியை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டது. அதற்கு பதிலாக மாயா வீதி ஊடாக ஹைலெவல் வீதிக்கு வந்து அங்கிருந்து ஸ்டெபர்ட் வீதி ஊடாக பாமன்கடைக்குச் சென்று கொஹுவலையை அடைய முடியும்.
ஹெவ்லொக் வீதியிலிருந்தும் வாகனங்கள் மாயா சுற்று வட்டத்தை பயன்படுத்தி டபிள்யூ.ஏ.டி.சில்வா மாவத்தையூடாக பாமன்கடையை அடையமுடியும் என நேற்றைய தினம் பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ram Monday, 19 July 2010 05:19 PM
இதை செய்வததுக்கு முன்னர் வீதியை அகலமாக்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்களை சிரமத்துக்கு உண்டாக்கும் நவடிக்கை கண்டிக்கவேண்டியது . சரியான திட்டமிடல் மூலம் செயற்படுத்த வேண்டும் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025