Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று இலங்கை ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.
தம்பிலுவில் அம்மன் கோவில்முன்வீதியைச் சேர்ந்த மாலவன், உமையாள் தம்பதிகளின் புதல்வியான சுபதா, தான் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெறுவேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "'நான் முயற்சி செய்து படித்ததற்கு ஏற்ற புள்ளிகள் கிடைத்துள்ளன. இப்பரீட்சைக்காக நன்றாக கற்பதற்கு எனக்கு என் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஊக்குவித்தனர். அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
எனது வகுப்பு ஆசிரியர்கள் நான் பரீட்சையில் முதலாவதாக வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள். அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியத்தில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
8 hours ago
18 Oct 2025
Thakshanamoorthy Thursday, 23 September 2010 12:29 AM
எனது வாழ்த்துக்கள்
Reply : 0 0
safeekAkkaraippattu Thursday, 23 September 2010 05:13 PM
எனது வாழ்த்துக்கள் .
Reply : 0 0
MN. Mohamed Mufaris Thursday, 23 September 2010 08:11 PM
தமிழ் மொழி மூலம் ahila இலங்கை reethiyaka emathu அம்பாறை மாவட்டத்தில் அதிலும் தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த மாணவி மாலவன் சுபதா முதலிடத்தை பெற்றுக் கொண்டதட்காஹ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்ஹின்றேன். (முபாரிஸ், மருதமுனை)
Reply : 0 0
Dr.G.Sugunan Thursday, 23 September 2010 08:47 PM
பெற்றோருக்கும் கிழக்கு மண்ணுக்கும் பெருமை சேர்த்த எங்கள் மகள் சுபதாவுக்கு பெரியப்பா ,பெரியம்மா ,சுபீட்ஷன் , இலட்ஷியன் ஆகியோரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Oct 2025