2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வறண்டுள்ள இரணைமடுக்குளம்...

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது நிலவுகின்ற வறட்சியால் 12.8 அடியாக குறைவடைந்துள்ளதென  கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர்; இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார்;.
கடந்த வருட இறுதியில் பருவமழை போதியளவு பெய்யாமையால் இக்குளத்தின் நீர்;மட்டம் 20 அடிக்கும் குறைவாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 02 மாதங்களுக்கு முன்னர்  இக்குளத்தின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தபோது, இதன் நீரைப் பயன்படுத்தி  500 ஏக்கரில் நெற்செய்கையும் 150 ஏக்கரில் சிறுதானியச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது இக்குளத்தின் நீர்மட்டம் 12.8 அடியாகவுள்ள நிலையில், இப்பயிர்ச் செய்கைகளுக்கு இடைநிலையிலும் நீர் பாய்ச்ச வேண்டியுள்ளது.
மழை வீழ்ச்சி கிடைக்காத பட்சத்தில் இக்குளத்தின் நீர்மட்டம் இன்னும் குறைவடையும் வாய்ப்புள்ளதெனவும்  அவர் கூறினார். (படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்)
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .