2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மன்னாரில்...

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட வேட்பாளர்களான ஜேசுநேசன் மார்க், எம்.எஹியான் ஆகியோர் இதன்போது உரை நிகழ்த்தினர். 

இதன்போது, மீள் குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன், வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .