Editorial / 2019 நவம்பர் 12 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொன்டனீக்ரோவுக்கெதிரான யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்க் நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாது தேசிய அணியின் பயிற்சி முகாமில் நேற்று நடந்த கலகமொன்றையடுத்தே குழாமிலிருந்து ஸ்டேர்லிங் நீக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பேர்ட்டன் ஒன் ட்ரன்ட் பயிற்சி நிலையத்தில் இங்கிலாந்து அணி பிரசன்னமாகியபோது இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியினதும் முன்களவீரரான ஸ்டேர்லிங், இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான ஜோ கோமெஸ்ஸூடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லிவர்பூலிடம் 1-3 என்ற கோல் கணக்கில் சிற்றி தோல்வியடைந்த போட்டியைத் தொடர்ந்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீரர்களின் உணவகத்துக்கு கோமெஸ் சென்றபோதே கழுத்துப் பக்கமாக அவரை ஸ்டேர்லிங் பிடிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறப்பட்ட போட்டியில் ஸ்டேர்லிங்கும், கோமெஸும் முரண்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடைபெற்ற சம்பவத்தை குறித்த போட்டியுடன் இணைத்து இங்கிலாந்தின் பயிற்சியாளர் கரெத் செளத்கேட் கருத்துத் தெரிவித்திருந்தார்.
22 minute ago
23 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
39 minute ago
46 minute ago