Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், வேல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியின் முதலாவது பாதியின் முடிவில் இங்கிலாந்து அணி 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததோடு, இரண்டாம் பாதியின் பெரும்பாலான நேரங்களிலும் அவ்வணியே முன்னிலை வகித்தது. எனினும், தொடர்ந்து போராடிய வேல்ஸ் அணி, இறுதியில் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணிக்கும் சமோவா அணிக்குமிடையிலான போட்டியில், தென்னாபிரிக்க அணி 46-6 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றது. ஜப்பான் அணியுடன் தோல்வியுற்று அழுத்தத்துக்குள்ளாகியிருந்த நிலையிலேயே, தென்னாபிரிக்காவுக்கு இந்த மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.
இத்தாலிக்கும் கனடாவுக்குமிடையிலான போட்டியில், இத்தாலி அணி 23-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஒரு கட்டத்தில் கனடா அணி 15-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், அதன் பின்னர் தோல்வியைத் தழுவியிருந்தது.
14 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
37 minute ago