Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாரிய வீதி விபத்துகள் 42 பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்களின் விவரம்:
கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் நீராட சென்றவர்களில் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago