2021 மே 15, சனிக்கிழமை

சச்சினின் அறிவுரையால் தொடர்ந்தும் விளையாடும் யுவ்ராஜ்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்காக விளையாடுவது முக்கியமென்ற போதிலும், அதை விட கிரிக்கெட் விளையாடுவதை மகிழ்வாக எண்ணுவது முக்கியமானது என, சச்சின் டென்டுல்கர் தெரிவித்த அறிவுரையே, தன்னைத் தொடர்ந்தும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைத்துக் கொண்டிருப்பதாக, இந்திய அணியின் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் தொடர் நாயகனாகத் தெரிவான யுவ்ராஜ் சிங், அதனைத் தொடர்ந்து, அரிதான புற்றுநோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டிருந்தார். எனினும், அதிலிருந்து மீண்ட பின்னர் அவர் போதியளவிலான திறமைகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையில், இந்திய அணியில் அவருக்கான இடம் கிடைத்திருக்கவில்லை.

தற்போது உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றிவரும் யுவ்ராஜ், தன்னால் இவ்விளையாட்டை மகிழ்வாக எண்ணி எப்போது வரை விளையாட முடிகின்றதோ, அப்போதுவரை விளையாட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, இந்தியாவுக்காக மீண்டும் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தால்,  அதை எதிர்பார்த்திருப்பதாகவும், தன்னால் முடிந்தளவு பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .