2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வென்றது இலங்கை 'ஏ'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 16 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை "ஏ" அணி, தனக்கான பயிற்சிப் போட்டியொன்றில் இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது. டேர்பிஷையர் அணிக்கெதிரான இப்போட்டியில், இலங்கை 'ஏ" அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மழை காரணமாக, 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட டேர்பிஷையர் அணி, 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில பென் ஸ்லேட்டர் 124 (118), தோமஸ் வூட் 44 (41), வெஸ் தேர்ஸ்டன் 32 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் லக்ஷன் சந்தகன், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

284 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை 'ஏ" அணி, 32.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, இலகுவான வெற்றியைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 119 (81), நிரோஷன் டிக்வெல்ல 67 (47), பானுக ராஜபக்ஷ ஆட்மிழக்காமல் 48 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .