Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் டென்னிஸ் சுற்றுப்போட்டியில் பெல்ஜிய வீராங்கனை கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் சம்பியனாகியுள்ளார். 27 வயதான கிளிஜ்ஸ்டர்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கியை 6-3, 5-7, 6-3 விகிதத்தில் தோற்கடித்தார்.
கடந்த சனிக்கிழமை இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்காக கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அரங்கிற்கு வந்துகொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த கார் விபத்தொன்றில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது. எனினும் அரங்கிற்கு வந்த அவர் அப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
நேற்று இறுதிப்போட்டியில் சம்பியனான கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு கட்டார் அமீரின் புதல்வி ஷேய்கா அலாயாஸா பிந்த் ஹமாட் பின் கலீபா அல் தானி, சம்பியன் கிண்ணத்தை கையளித்தார்.
இதேவேளை இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற போதிலும் கரோலின் வொஸ்னியாக்கி இவ்வருட இறுதிவரை சர்வதேச மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கப்போவது உறுதியாகியுள்ளது.
20 வயதான கரோலின் இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் எதிலும் சம்பியனாகியதில்லை. எனினும் ஏனைய பல போட்டிகளில் சம்பியனாகியதுடன் தொடர்ச்சியாக அவர் விளையாடி வருவதால் தரப்படுத்தலில் அவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .