Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் விளையாட்டை உற்சாக நடன மங்கையர்கள் எப்படி ஊக்குவிக்கிறார்கள், ஐ.பி.எல். போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் கிளேடியேட்டர்கள் (ரோமில் கேளிக்கைக்ககாக அரங்கில் சண்டையிடுபவர்கள்) போல் ஏலமிடப்படுவது ஏன் என்றெல்லாம், இந்திய நாடாளுமன்ற நிலையியற் குழுவொன்று இந்திய கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். சுற்றுப்போட்டிகள் தொடர்பான பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரித்து வரும் இந்திய நாடாளுமன்ற விசாரணைக் குழுவே இக்கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சஷாங் மனோகர், செயலார் என். ஸ்ரீனிவாசன் , ஐ.பி.எல். ஆணையாளர் சிராயு அமீன் ஆகியோர் உட்பட கிரிக்கெட் சபை அதிகாரிகளிடம் இக்கேள்விகளை இந்திய நாடாளுமன்ற விசாரணைக்குழு எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். சுற்றுப்போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்கு உதவுவதாகவும் திறமையான வீரர்களை ஈர்ப்பதாகவும் இந்திய கிரிக்கெட் சபை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உற்சாக நடனமங்கைகளின் பாத்திரம் குறித்து விளக்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யஸ்வந்த் சின்ஹா தலைமையிலான இவ்விசாரணைக்குழு சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக இந்திய கிரிக்கெட் சபை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago