2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

Super User   / 2011 ஜனவரி 22 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

வெலிங்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் 124 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மிஸ்ப உல் ஹக் மாத்திரம் அரைச்சதம் குவித்தார். பாகிஸ்தான் அணியின் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 3 வீரர்கள் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் டிம் சௌதீ, 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஜோஸ் ரைடர் 34 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றார். மார்டின் குப்டில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

டிம் சௌதீ இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். 6 போட்டிகள்கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--