Super User / 2011 மார்ச் 03 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனேடிய அணியுடனான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
எனினும் அவ்வணி எதிர்பார்த்ததுபோல் ஓட்டங்களைக் குவிக்கமுடியவில்லை. 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை இழந்த அவ்வணி 16 ஆவது ஓவரில் 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 4 ஆவது விக்கெட்டையும் இழந்தது.
43 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக உமர் அக்மல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
கனேடிய பந்துவீச்சாளர்களில் ஹார்விர் பைத்வான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கனேடிய அணி 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. 35 ஆவது ஓவரில் அவ்வணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கனேடிய அணி வெற்றி இலங்கை நெருங்குவது போல் தோன்றியது.
எனினும் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி சிறப்பாக பந்துவீசி கனேடிய அணியை கட்டுப்படுத்தினார்.
42.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது கனேடிய அணி. ஜிம்மி ஹன்ஸ்ரா 43 ஓட்டங்களைப்பெற்றர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சஹீட் அவ்ரிடி 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
.jpg)
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025